பள்ளிக்கு மதுபானம் எடுத்துச்சென்ற 7 வயதுச் சிறுவன்

பள்ளிக்கு மதுபானம் எடுத்துச்சென்ற 7 வயதுச் சிறுவன்

1 mins read
cb7dab2f-5a35-4c26-9621-3da1f5e00499
இந்தச் சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் இணையத்தில் பதிவேற்றிய காணொளி மூலம் இணையவாசிகளுக்குத் தெரிய வந்தது. - படம்: இணையம்

சீனாவில் தொடக்கப் பள்ளி மாணவன் ஒருவனின் செயல் வகுப்பறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜியாமென் பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன் ஒருவன் பெற்றோருக்குத் தெரியாமல் இரண்டு மது போத்தல்களைப் பள்ளிக்கு எடுத்துச் சென்றான்.

அவன் அதை நண்பர்களுடன் சேர்ந்து பருகியதாகவும் தெரிகிறது.

செப்டம்பர் மாதம் நடந்த இந்தச் சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் இணையத்தில் காணொளி ஒன்றைப் பதிவேற்றியுள்ளார்.

சிறுவனைக் கண்டிக்கும் விதமாக, சுவரை நோக்கி நிற்கும்படி தண்டனை அளித்துள்ளதாகவும் மேலும் ஆடைகளைத் தொங்கவிடும் கம்பி (ஹேங்கர்) உடையும்வரை அவனை அடித்ததாகவும் தாயார் அந்தக் காணொளியில் கூறியுள்ளார்.

“அவன் எப்போது அந்த மது போத்தல்களை எடுத்தான் என்று எங்களுக்குத் தெரியாது. அவன் செய்த செயலுக்காக அவனுடைய வகுப்பு ஆசிரியரிடமும் அவனுடைய வகுப்பில் பயிலும் சக மாணவர்களின் பெற்றோர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என அவர் கூறினார்.

மேலும், அந்தச் சிறுவனின் வகுப்பு ஆசிரியருடன் ‘வீசாட்டில்’நடந்த உரையாடலின் புகைப்படத்தையும் தாயார் அந்தக் காணொளியில் பகிர்ந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்