கூச்சிங்கில் கொடூரக் கொலை: ஏழு பேருக்கு வலைவீச்சு

கூச்சிங்கில் கொடூரக் கொலை: ஏழு பேருக்கு வலைவீச்சு

1 mins read
20b1cc87-6b15-494d-a0a6-a68119b7a004
ஆயுதம் ஏந்திய சிலர் ஆடவரின் வீட்டுக்குள் நுழைந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. - படம்: கண்காணிப்பு கேமரா பதிவு

கூச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் தலைநகரமான கூச்சிங்கில் உள்ள கூட்டுரிமை வீட்டில் 22 வயது ஆடவர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

அந்த ஆடவர் தமது வீட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது கார் சேதப்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் நிகழ்ந்தது.

இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 21 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

மேலும் ஏழு பேரை சரவாக் காவல்துறையினர் வலைவீசித் தேடுகின்றனர்.

இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்