தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏலத்துக்கு விடப்படும் புத்தர் நகைகள்

1 mins read
3073394b-4ca0-4ed7-97b0-701835374293
புத்தர் உடலில் இருந்த நகைகள். - படம்: சோத்பி கழகம்
multi-img1 of 2

லண்டன்: புத்தரின் உடலில் இருந்ததாகக் கூறப்படும் நகைகள் வரும் புதன்கிழமை (மே 7) ஏலத்துக்கு வரவுள்ளன.

நவீன காலத்தின் ஆக ஆச்சரியமான தொல்பொருளியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இவை, ஹாங்காங்கில் சோத்பி கழகத்தில் ஏலத்துக்கு விடப்படும்.

இந்த நகைகள், 1898ஆம் ஆண்டு இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை யாரும் அதிகமாகப் பார்த்ததில்லை. தனியார் பிரிட்டி‌ஷ் அமைப்பு ஒன்று இவற்றைக் கவனித்து வந்துள்ளது.

இப்போது இவை ஏலத்துக்கு விடப்படவுள்ள நிலையில் சிறிதளவு அதிருப்தியும் எழுந்துள்ளது.

புத்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் அவரின் உடல் எலும்புகளுடன் இந்த நகைகள் கண்டெடுக்கப்பட்டன. இக்கண்டுபிடிப்பு, தொல்பொருளியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தியாவின் தெய்வீகமான வரலாற்றுடன் தொடர்புடைய பொக்கி‌ஷங்கள் விற்கப்படுவது நியாயமான செயல்தானா என்ற கேள்வி தலைதூக்கியுள்ளது. புத்தர் சம்பந்தப்பட்ட பழம்பெரும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் விற்பனைப் பொருள்களாகப் பார்க்கக்கூடாது என்பது கல்விமான்கள் சிலரின் வாதம்.

அதேவேளை, ஏலத்தில் விடுவதுதான் இக்கண்டுபிடிப்புகளை பொளத்த சமயத்தினரிடம் நியாயமான முறையில் ஒளிவுமறைவின்றி ஒப்படைப்பதற்கான ஆகச் சிறந்த வழி என்றும் சில தரப்பினர் கூறுகின்றனர். அதை சோத்பி கழகம் சரிவரச் செய்யும் என்றும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்