ஆம்ஸ்டர்டாம்: டச்சுக் கடல் பகுதியில் கிரீசில் இருந்து இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பல் வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரியத் தொடங்கியது.
அந்தக் கப்பலை மீட்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அதை கப்பல் செல்லும் வழித்தடங்களில் இருந்து வேறு இடத்திற்கு நகர்த்தும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக ‘ரிஜ்க்ஸ்வாட்டர்ஸ்டாட்’ எனும் டச்சு நீர் கழகமும் ஊடகமும் தெரிவித்தன.
டச்சு தீவுகளான அமிலாண்ட், சியர்மோனிகூக் ஆகியவற்றிற்கு வடக்கே 16 கிமீ தொலைவில் இருக்கும் இடத்திற்கு கப்பலை இழுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாக ‘ரிஜ்க்ஸ்வாட்டர்ஸ்டாட்’ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கப்பலை நகர்த்தும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது எனவும் வானிலை, கப்பலிலிருந்து வரும் புகை, மின்னோட்டம், அலைகள் ஆகியவற்றைச் சார்ந்து அது எப்பொழுது முடியும் எனத் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தது.
அந்தத் தற்காலிக இடம் கப்பல் வழித்தடங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கும். இந்த இடமாற்ற நடவடிக்கை கப்பலை மீட்கும் நடவடிக்கையில் ஒரு இடைநிலை படியாகும் என ‘ரிஜ்க்ஸ்வாட்டர்ஸ்டாட்டின்’ பேச்சாளர் ‘ஏஎன்பி’ டச்சு செய்தி அமைப்பிடம் தெரிவித்தார்.


