தமிழ்ப்பள்ளி ஆசிரியர் பணியில் சேர தகுதியானவர்களுக்கு அழைப்பு

387 தமிழ்ப்பள்ளிகளுக்கு 540,000 ரிங்கிட் செலவில் பல்லூடக திறன் பலகைகள்

தமிழ்ப்பள்ளி ஆசிரியர் பணியில் சேர தகுதியானவர்களுக்கு அழைப்பு

2 mins read
35d1749c-c5f3-4bda-8c49-fba237f265b1
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள  45 தமிழ்ப்பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) பல்லூடகத் திறன் பலகைகள் வழங்கப்பட்டன. பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ. - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செண்டாயான்: தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிட பற்றாக்குறையைப் போக்க தகுதியுடையவர்களை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சி இளங்கலைப் பட்டப் படிப்பு திட்டத்தில் பயில தகுதியுள்ள இந்திய மாணவர்களிடமிருந்து போதுமான விண்ணப்பங்கள் கிடைக்காததால் தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க அமைச்சு சிரமத்தை எதிர்நோக்குகிறது.

எனவே, இவ்வாண்டு அதிகமானோர் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் அவர்.

இதில், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழ்ப்பள்ளிகளின் அனைத்துப் பங்குதாரர்களும் உதவ வேண்டும் என்று அவர் சொன்னார்.

நாடளவில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் என்று திரு வோங் கூறினார்.
நாடளவில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் என்று திரு வோங் கூறினார். - படம்: வர்ணம் மலேசியா

மேலும், கல்வி அமைச்சு மார்ச் மாதத்தில் 20,000 ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க இருப்பது, தற்போதுள்ள ஒப்பந்த ஆசிரியர்களின் வாய்ப்புகளை பாதிக்காது என்றும் திரு வோங் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஆசிரியர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 20,000 ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 2 முதல் 20 வரை இடம்பெற்றும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுடன் உரையாடிய அமைச்சர் வோங்.
செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுடன் உரையாடிய அமைச்சர் வோங். - படம்: வர்ணம் மலேசியா

நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கு பல்லூடகத் திறன் பலகைகள் (Smart board) வழங்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) அமைச்சர் வோங் பேசினார்.

மலேசியக் கல்வித் துறையின் மின்னிலக்கமாக்கலை வலுப்படுத்தவும், 21ஆம் நூற்றாண்டின் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய பள்ளிகள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியாக இது இடம்பெறுகிறது.

அங்குள்ள செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 45 தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் பல்லூடகத் திறன் பலகைகள் வழங்கப்பட்டன.

தமிழ்ப்பள்ளிகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவில் 387 தமிழ்ப்பள்ளிகளுக்கு பல்லூடகத் திறன் பலகைகளை மலேசிய இந்திய சமூக உருமாற்ற அமைப்பு (மித்ரா), வழங்கி வருகிறது. இதற்காக 540,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, சிலாங்கூர், பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா, பல்லூடகத் திறன் பலகைகளை வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்