தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்போடியாவில் 2026லிருந்து கட்டாய ராணுவச் சேவை

1 mins read
c638033b-48a1-497c-a445-c29ed974c8b0
கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நோம் பென்: கம்போடியாவின் 2026ஆம் ஆண்டிலிருந்து கட்டாய ராணுவச் சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஹுன் மானெட் திங்கட்கிழமை (ஜூலை 14) அறிவித்தார்.

கம்போடியாவில் கட்டாய ராணுவச் சேவை சட்டம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

18க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அனைத்து கம்போடியர்களும் 18 மாத ராணுவச் சேவை புரிய வேண்டும் என்று கம்போடிய நாடாளுமன்றம் 2006ஆம் ஆண்டில் அறிவித்தது.

ஆனால், இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அண்டை நாடான தாய்லாந்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கட்டாய ராணுவச் சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கம்போடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிலப்பகுதி தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே இருந்து வரும் சர்ச்சை கடந்த மே மாதம் மோசடைந்தது. எல்லையோரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இருதரப்பு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

அந்தச் சம்பவம் தங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது என்றும் ராணுவத்தைச் சீரமைக்க வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும் திரு ஹுன் மானெட் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்