காஸாவில் உடனடியாகப் போரை நிறுத்த அழைப்பு விடுத்த கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

1 mins read
c916eb94-684c-4fc6-9079-6f7dcbe9365b
தெற்கு காஸாவில் இருக்கும் ரஃபா பகுதியில் இடிந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ள சிறுவன். - படம்: ப்ளூம்பெர்க்

சிட்னி: காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு கனடா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் வியாழக்கிழமை (பிப்ரவரி 15 ஆம் தேதி) அழைப்பு விடுத்தனர்.

ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளவிருக்கும் திட்டமிட்ட ராணுவ நடவடிக்கை தொடர்பான அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.

“இஸ்ரேல் ரஃபாமீது தரைவழித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதை எண்ணி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். ரஃபாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது பேரழிவை ஏற்படுத்தும்,” என அந்நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

“உடனடியாக மனித நேய அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும்,” என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ரஃபாவில் திட்டமிட்டபடி ஹாமாசுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துச் செல்லும் என்றும் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமான ரஃபாவில் வசிக்கும் பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறியவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பிப்ரவரி 14ஆம் தேதி கூறினார்.

இஸ்ரேலை தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் ஹமாஸ் ஆயுதம் ஏந்திய தாக்குதலைக் களைந்து எஞ்சியிருக்கும் பணையக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்நாடுகள் அவ்வறிக்கையில் வலியுறுத்தின.

குறிப்புச் சொற்கள்