நியூயார்க்: கனடாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்த அடிப்படை வரிவிதிப்புகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ளது.
கனடிய ஏற்றுமதிகளுக்கான 35 விழுக்காடு அடிப்படை வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்றால் தங்களுடனான வரிவிதிப்பு ஒப்பந்தத்தைக் கனடா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
மேலும் வரிவிதிப்பு ஒப்பந்தத்தைக் கனடா ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் திரு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், கனடியப் பிரதமர் மார்க் கார்னே, அமெரிக்காவுடனான வரிவிதிப்பு ஒப்பந்தத்தை எக்காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
கனடிய மக்களின் நலனுக்கு எதிராக உள்ள எதையும் நாங்கள் செய்யமாட்டோம் என்று அவர் கூறினார்.

