பெய்ஜிங்: சீனாவின் தென் பகுதியில் உள்ள ஸுஹாய் நகரில் பாதசாரிகளை கார் ஒன்று மோதித் தள்ளியது.
நவம்பர் 11ஆம் தேதியன்று நிகழ்ந்த இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
சியாங்சோ விளையாட்டு மையத்தில் பாதசாரிகளை மோதித் தள்ளிவிட்டு அந்த கார் அங்கிருந்து சென்றுவிட்டதாகச் சீனக் காவல்துறை கூறியது.
நவம்பர் 12ஆம் தேதியிலிருந்து அந்நகரில் சீனாவின் சிவில் மற்றும் ராணுவ விமானப் பிரிவுகளின் ஆற்றலைக் காட்சிப்படுத்தும் மிகப் பெரிய விமானக் கண்காட்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாதசாரிகளை கார் ஒன்று மோதித் தள்ளியது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயமடைந்தோர் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
பாதசாரிகளை அந்த கார் ஓட்டுநர் மோதித் தள்ளியதற்கான நோக்கமும் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அந்த காரை ஓட்டியதாக நம்பப்படும் 62 வயது நபர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் காவல்துறை கூறியது.

