ஆங்கிலம் பேசத் தடுமாறிய பயணியைக் கிண்டல் செய்த சிப்பந்திகள் பணி நீக்கம்

ஆங்கிலம் பேசத் தடுமாறிய பயணியைக் கிண்டல் செய்த மூன்று சிப்பந்திகளைப் பணியில் இருந்து நீக்கியுள்ளது கேத்தே பசிபிக் விமான நிறுவனம். 

சம்பவம் மே 21ஆம் தேதி சீனாவின் செங்டுவில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் நடந்தது.

பயணி தமக்கு போர்வை வேண்டும் என்று கேட்டுள்ளார், ஆங்கிலத்தில் சரியாகப் பேசத் தடுமாறிய அவரை சிப்பந்திகள் வசைபாடியுள்ளனர். 

அது குறித்து அந்த பயணி சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். விமான நிறுவனத்திடமும் புகார் கொடுத்தார். அது பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களை கேத்தே பசிபிக் பாரபட்சமாக நடத்துவதாகவும் ஆங்கிலம் தெரிந்தவர்களை அது கொண்டாடுவதாகவும் புகார் எழுந்தது. 

பயணிகளிடம் இதுபோன்று நடந்துகொள்வதை கேத்தே பசிபிக் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது  என்று அதன் பேச்சாளர் தெரிவித்தார். ஊழியர்களுக்கு பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

சம்பவம் குறித்து நிறுவனம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!