காஸாவுக்குள் குறிப்பிட்ட அளவு உணவு அனுமதிக்கப்படும்: இஸ்ரேல்

1 mins read
f536e431-91ba-44ec-a3f6-2a9515f0c5c2
காஸாவில் பொருள்கள் கொண்டுசெல்லப்படுவதை இஸ்ரேல் கிட்டத்தட்ட 10 வாரங்கள் தடுத்துவைத்திருந்தது. - படம்: இபிஏ

காஸா: காஸாவில் பட்டினி ஏற்படுவதைத் தவிர்க்க குறிப்பிட்ட அளவில் உணவுப் பொருள்களைக் கொண்டுசெல்ல அனுமதிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 10 வாரங்களுக்குஉள்ளே எடுத்துச் செல்லப்படுவதை இஸ்ரேல் தடுத்துவைத்திருந்தது.

இஸ்ரேலிய ராணுவப் படைகளின் பரிந்துரைக்கும், ஹமாஸ் தரப்புக்கு எதிராக மீண்டும் தொடங்கும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் சொன்னது.

காஸாவில் விரிவான ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இஸ்ரேலின் அறிவிப்பு வெளிவந்தது.

உணவு, எரிப்பொருள், மருந்துகள் போன்றவற்றின் மீதான தடையை நீக்கும்படி இஸ்ரேலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது.

காஸாவின் 2.1 மில்லியன் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய பட்டினி குறித்து உதவி அமைப்புகள் எச்சரித்தன.

ஆயிரக்கணக்கானோருக்கு உதவி அமைப்புகள் சமைத்த உணவை வழங்கிவருகின்றன.
ஆயிரக்கணக்கானோருக்கு உதவி அமைப்புகள் சமைத்த உணவை வழங்கிவருகின்றன. - படம்: ஏஎஃப்பி

இஸ்ரேல், உடனடியாக, பெரிய அளவில் எந்தத் தடையுமின்றி காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும் என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன் நோவெல் பேட்டர் கேட்டுக்கொண்டார்.

நிவராணப் பொருள்களின் விநியோகம் ஹமாஸ் வசம் செல்வதையும் இஸ்ரேல் தடுக்க முயலும் என்று குறிப்பிட்டது.

பட்டினி ஏற்படுவதைத் தவிர்க்க இஸ்ரேல் உணவுப் பொருள்களை காஸாவுக்குள் அனுப்ப ஒப்புக்கொண்டது.
பட்டினி ஏற்படுவதைத் தவிர்க்க இஸ்ரேல் உணவுப் பொருள்களை காஸாவுக்குள் அனுப்ப ஒப்புக்கொண்டது. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்