அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனாவின் பங்கும் உள்ளது: டிரம்ப்

அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனாவின் பங்கும் உள்ளது: டிரம்ப்

1 mins read
திரு டிரம்ப் அடுத்த மாதம் சீனா செல்லவுள்ளார்.
95ed7779-fc04-4403-8978-f51689078f97
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா 100 விழுக்காடு வெற்றிபெற்றதாகவும் அதிபர் டிரம்ப் கூறினார். - படம்: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க்: ஈரானுடனான போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனாவின் பங்கு உள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த சீனா ஈரானுடன் பேசியதா என்று அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “நான் கேள்விப்பட்டேன், அது உண்மைதான்,” என்று அவர் கூறினார்.

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா 100 விழுக்காடு வெற்றிபெற்றதாகவும் அதிபர் டிரம்ப் கூறினார்.

“ஈரானில் உள்ள யுரேனியம் பாதுகாப்பாக இருக்கும். அதனால்தான் சண்டை நிறுத்தம் சாத்தியமானது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அமெரிக்கா எந்தத் தாக்குதலையும் நடத்தாது என்று பேச்சுவார்த்தை மூலம் அமைதி எட்டப்பட்டுள்ளது.

சீனாவும் ஈரானும் அரசதந்திர முறையில் நெருக்கமான நாடுகளாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு டிரம்ப் அடுத்த மாதம் பெய்ஜிங் செல்லவுள்ளார். அங்கு அவர் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், சண்டை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டதை அமெரிக்காவின் வெற்றி காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

“அதிபர் டிரம்ப்புக்குக் கிடைத்த வெற்றி இது. இதை நமது ராணுவம் நடத்திக் காட்டியுள்ளது,” என்றார் திருவாட்டி கரோலின்.

குறிப்புச் சொற்கள்