தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருக்கடியில் உள்ள வீட்டுத் திட்டங்களுக்கு நிதி ஆதரவை சீனா அதிகரிக்கிறது

1 mins read
402a0644-f6f0-4d2f-9e89-b24b3631c903
ஷாங்காயில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகள். வீட்டுத் திட்டங்களை முடிக்க சீனா நிதியாதரவை அதிகரிக்கிறது. - கோப்புப் படம்: புளூம்பெர்க்

பெய்ஜிங்: நிதியுதவிக்குத் தகுதியான வீட்டுத் திட்டங்களின் ‘வெள்ளைப்பட்டியலை’ சீனா விரிவுபடுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய வீட்டுத் திட்டங்களுக்கான வங்கிக் கடனை 4 டிரில்லியன் யுவானாக ($562 பில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரிக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற, கிராம மேம்பாட்டு அமைச்சர் நி ஹோங் வியாழக்கிழமை (அக்டோபர் 17) தெரிவித்தார்.

நகரமயமாக்கல் திட்டங்களை விற்று பணமாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அத்தகைய திட்டங்களில் ஒரு மில்லியன் வீடுகள் சேர்க்கப்படும் என்று செய்தியாளர் கூட்டத்தில் திரு நி குறிப்பிட்டார்.

நிதி நெருக்கடியில் உள்ள மேம்பாட்டளர்களுக்கும், நகர்ப்புற மேம்பாடுகளுக்கும் அதிக நிதியுதவிக்கான உத்தரவாதம், 2021ல் நெருக்கடியில் மூழ்கிய ஒரு துறையை தூக்கி நிறுத்துவதற்காக அண்மைய வாரங்களில் அறிவிக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

கடந்த ஜனவரியில் மேம்பாட்டாளர்கள் கட்டுமானத்தை முடித்து வீடுகளை வாங்கியோருக்கு வழங்குவதை உறுதிசெய்ய நிதியுதவி பெறக்கூடிய திட்டங்களின் ‘வெள்ளை பட்டியல்’ திட்டத்தை சீனா அறிவித்தது.

மூன்றாம் காலாண்டின் முடிவில், வங்கிகள் 5,392 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதற்கான நிதியுதவி கிட்டத்தட்ட 1.4 டிரில்லியன் யுவானை எட்டியுள்ளது.

‘வெள்ளை பட்டியல்’ திட்டங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன்கள் அக்டோபர் 16 வரை 2.23 டிரில்லியன் யுவானாக உயர்ந்துள்ளதாக மாநில நிதி ஒழுங்குமுறை நிர்வாகத்தின் துணை இயக்குநர் ஸியாவ் யூவான்சி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்