பிலிப்பீன்சுக்கு ஆதரவுதரும் கனடாவுக்கு சீனா கண்டனம்

1 mins read
bb39b633-5745-4642-b499-f8e2b7eabce2
டிசம்பர் 2ஆம் தேதி எடுத்த இந்தப் படத்தை பிலிப்பீன்ஸ் கடலோர காவல்படை டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்டது. - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: தென்சீனக் கடல் விவகாரங்களில் பீலிப்பீன்சுக்கு உதவுவதாகக் கூறி கனடாவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இறையாண்மையை மீறும் செயல் என்று கனடாவில் உள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

“தென்சீனக் கடல் அவ்வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு பொதுவான தாயகமாகும். அமெரிக்கா, கனடா மற்றும் இதர நாடுகள் தங்கள் புவிசார் அரசியல் நலன்களுக்காக வேட்டையாடும் இடமாக அது மாறிவிடக் கூடாது,” என்று அறிக்கை தெரிவித்தது.

கடந்த சில மாதங்களாக சீனாவும் பிலிப்பீன்சும் தென் சீனக் கடலில் உள்ள செகன்ட் தாமஸ் ஷோல் தீவுக்கு அருகே ஒன்றையொன்று எதிர்கொண்டு வருகின்றன.

“சீனாவின் இறையாண்மையை மீறுவதற்கு வட்டாரத்திற்கு வெளியே உள்ள ஒரு நாடான கனடா, பிலிப்பீன்சுக்கு தைரியம் அளித்துள்ளது. இது, ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது. மேலும் வட்டார அமைதி, நிலைத் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று கனடிய தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆனால் தென்சீனக் கடலில் ஏற்பட்ட மோதலுக்கு சீனாவே காரணம் என்று பிலிப்பீன்ஸ் கூறியுள்ளது.

மறுவிநியோகப் படகுகள் மீது நீரைப் பீய்ச்சியடித்தாகவும் சர்ச்சைக்குரிய நீர் நிலைகளில் இருந்த கப்பல் மீது வேண்டுமென்றே மோதியதாகவும் சீனா மீது பிலிப்பீன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் பிலிப்பீன்சுக்கு ஆதரவாக நடந்துகொண்டது.

தென் சீனக் கடல் பரப்பில் ஏறக்குறைய ஒட்டுமொத்த பகுதிக்கும் சொந்தம் கொண்டாடும் சீனா, தனது நாட்டின் இறையாண்மையை மீறி பிலிப்பீன்ஸ் செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகிறது.

குறிப்புச் சொற்கள்