ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: சீனா கண்டனம்

1 mins read
48ed513b-cf13-4c70-86e4-090919b13a4e
மத்திய கிழக்கு விவகாரம் குறித்து ஐநா பாதுகாப்பு மன்றம் வெள்ளிக்கிழமையன்று நடத்திய கூட்டத்தில் சீனாவுக்கான  தூதர் ஃபூ கொங், இஸ்ரேலின் தாக்குதல் குறித்த தம் நாட்டின் நிலைப்பாட்டை விளக்கினார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: ஈரானின் அரசுரிமையையும் எல்லைப் பாதுகாப்பையும் மீறியதை சீனா கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சீனாவுக்கான தூதர் ஃபூ கொங் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீவிரமடைந்து வருவதையும் மோதல்கள் பெருகி வருவதையும் சீனா எதிர்ப்பதாக திரு ஃபூ, மத்திய கிழக்கு விவகாரம் குறித்து ஐநா பாதுகாப்பு மன்றம் வெள்ளிக்கிழமையன்று நடத்திய கூட்டத்தின்போது கூறினார்.

ஈரானுடனான அணுவாயுதப் பேச்சுவார்த்தைகளின் மீது இந்த அத்துமீறலும் வேறு சில அண்மைச் சம்பவங்களும் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து சீனா கவலைப்படுவதாக திரு ஃபூ தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை காலை ஈரானில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அணுவாயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் நீண்டகால நடவடிக்கையின் தொடக்கமாக அந்தத் தாக்குதல் திகழ்வதாகக் கூறியது. 

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான், வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேலின் ஆகப் பெரிய இரண்டு நகரங்களான ஜெருசலத்திலும் பெத்தல்ஹம்மிலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. 

இஸ்ரேல், ஈரான் ஆகியவற்றின் நிலவரம் சிக்கலாகவும் அபாயகரமாகவும் இருப்பதாக சீனா, அங்குள்ள தன் குடிமக்களுக்கு ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஏவுகணை மற்றும் வானூர்தித் தாக்குதலுக்குத் தயாராகும்படியும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்