முத்தரப்புச் சந்திப்புக்காக ர‌ஷ்யா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: உறுதிப்படுத்தியது சீனா

முத்தரப்புச் சந்திப்புக்காக ர‌ஷ்யா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: உறுதிப்படுத்தியது சீனா

முதன்முறையாக இந்த முத்தரப்புச் சந்திப்பு நடைபெறக்கூடும்
1 of 2
படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி

04 Nov 2026 - 8:20 pm

1 mins read

பெய்ஜிங்: ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சநிலை மாநாட்டில் ர‌ஷ்ய, அமெரிக்க அதிபர்களும் தங்கள் நாட்டு அதிபரும் சந்திப்பு நடத்துவது குறித்து அமெரிக்காவுடனும் ர‌ஷ்யாவுடனும் தொடர்பில் இருந்து வருவதாக சீனா கூறியுள்ளது.

அச்சந்திப்பு நடந்தால் அது இந்த மூன்று அணுசக்தி நாடுகளுக்கிடையே நடக்கும் முதல் முத்தரப்புச் சந்திப்பாக அமையும். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இருவரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஏபெக் உச்சநிலை மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் அமர்வுச் சந்திப்பில் கலந்துகொள்ளத் தாங்கள் விரும்புவதாக ஏற்கெனவே வெளிப்படையாக விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அத்தகைய சந்திப்புக்கு சீனா தயாராய் இருப்பதைக் குறிக்கும் கருத்துகளை சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவ் நிங் புதன்கிழமை (நவம்பர் 4) தெரிவித்தார். ஏபெக் உச்சநிலை மாநாடு நடைபெற இன்னும் இரு வாரங்கள் எஞ்சியிருக்கின்றன.

“சீன, ர‌ஷ்ய, அமெரிக்கத் தலைவர்களுக்கிடையே இடம்பெறக்கூடிய சந்திப்பு குறித்து சீனா சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்பில் இருந்தவருகிறது,” என்று பெய்ஜிங்கில் திட்டமிட்டபடி நடைபெற்றுவரும் சந்திப்பு ஒன்றில் மாவ் தெரிவித்தார். மூன்று நாட்டுத் தலைவர்களும் ‌ஷென்சனில் நடக்கும் ஏபெக் உச்சநிலை மாநாட்டில் சந்திப்பு நடத்துவது குறித்து திட்டங்கள் உள்ளனவா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்