சீன ராணுவத்தைக் கிண்டல் செய்ததற்காக $2.9 மில்லியன் அபராதம்

சீன ராணுவத்தைக் கிண்டல் செய்ததற்காக $2.9 மில்லியன் அபராதம்

1 mins read
6e18ce29-e777-416d-b30c-1eb727d0397b
படம்: ராய்ட்டர்ஸ் -

சீன ராணுவத்தைக் கிண்டல் செய்ததற்காக அந்நாட்டில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 2.9 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் நகைச்சுவைக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஷான்காய் சியாகுவா கல்ச்சர் மீடியா என்ற அந்த நிறுவனம் நிகழ்ச்சிக்கான விதிமுறைகளை மீறியதாகவும் அது சட்டவிரோதமான சில ஆயிரம் வெள்ளி ஈட்டியதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனி அந்நிறுவனம் நிகழ்ச்சிகளை ஏற்று நடத்த தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சீன அதிபர் ஸி ஜின்பிங் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்திடம் கூறிய வசனத்தைக் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

நிறுவனம் 2015ஆம் ஆண்டு முதல் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் படைத்து வருகிறது. அது சீன இளையர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்று கூறப்படுகிறது.

நிறுவனத்தின் உதவியால் நூற்றுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கலைஞர்கள் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்