சீனா: வெளிநாட்டு ஒற்றர்கள் விண்வெளித் திட்ட ரகசியங்களைத் திருட முயற்சி

1 mins read
ff3ba112-a43a-4123-8c56-c95df006003b
சீனா எதிர்காலத்தில் நீடித்து நிலைத்திருக்கவும் மேம்படுவதற்கும் விண்வெளிப் பாதுகாப்பைக் காப்பது முக்கிய உத்தியாக உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: வெளிநாட்டு வேவு அமைப்புகள் நாட்டின் விண்வெளித் திட்டத்திலிருந்து ரகசியங்களைத் திருட முயற்சி செய்வதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

விண்வெளியில் ஆயுதங்களுக்கான போட்டி தீவிரமடைந்து ராணுவப் போராட்டத்திற்கான புதிய போர்க்களமாக உருவெடுத்துவரும் நிலையில், சீனாவின் கருத்து வந்துள்ளது.

சீனா எதிர்காலத்தில் நீடித்து நிலைத்திருக்கவும் மேம்படுவதற்கும் விண்வெளிப் பாதுகாப்பைக் காப்பது முக்கிய உத்தியாக உள்ளதாக அமைச்சு கூறியது.

“அண்மைய ஆண்டுகளில், சில மேற்கத்திய நாடுகள் விண்வெளிப் போர்ப் படைகளை அமைத்து, விண்வெளிச் செயல் ஆற்றல்களைப் பயன்படுத்தி, விண்வெளித் துறையில் சீனாவைப் பெரும் போட்டியாளராகக் கருதுகின்றன,” என்று அமைச்சு சொன்னது.

வெளிநாட்டு வேவு அமைப்புகள் சீனாவுக்கு எதிராக உயர் துல்லியத் துணைக்கோள்கள் மூலம் தொலைதூரச் சோதனைகளை நடத்தியதாக அது கூறியது. விண்வெளியிலிருந்து சீனாவிடமிருந்து ரகசியங்களைக் கண்காணித்து திருடுவது அவற்றின் நோக்கம் என்றது அமைச்சு.

அது குறிப்பிட்டு எந்த நாட்டையும் சொல்லவில்லை. இருப்பினும், சீனாவின் வான்வெளித் துறையில் ஊடுருவல், திருட்டு நடவடிக்கைகளை சில நாடுகள் மேற்கொண்டுள்ளதாக அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்