தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் முதல் நான்காம் தலைமுறை அணுவுலையை சீனா தொடங்கியது

1 mins read
92856324-dd12-4840-8d5c-c48bcb775659
ஷிடாவ் விரிகுடா அணுமின் நிலையத்தில் இருக்கும் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான பொருள்கள் சீனாவில் வடிவமைக்கப்பட்டவை எனக் கூறப்பட்டது. - படம்: ஹொலா ஃபுஜியன்/எக்ஸ்

பெய்ஜிங்: சீனா உலகிலேயே முதல்முறையாக அடுத்த தலைமுறை அணுமின் நிலையத்தை வர்த்தக நடவடிக்கைக்காகத் திறந்துள்ளது.

அது வாயுவால் குளிரூட்டப்பட்ட அணுவுலைகளால் இயங்கும் மின் நிலையங்கள் என சின்ஹுவா செய்தி நிறுவனம் டிசம்பர் 6ஆம் தேதி தெரிவித்தது.

கிழக்கு ஷான்டோங் மாநிலத்தில் உள்ள ஷிடாவ் விரிகுடா அணுமின் நிலையத்தில் இருக்கும் இரண்டு உயர் வெப்பநிலை உலைகள் வாயுவால் குளிரூட்டப்படுகின்றன என அது மேலும் குறிப்பிட்டது.

இதன்மூலம் அந்த அணுவுலைகள் மிகவும் திறம்படச் செயல்படவும் குறைந்த செலவில் இயங்கவும் முடியும் என அது எடுத்துரைத்தது.

இதன்மூலம், நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் வெளிநாட்டு தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் சீனா முயல்வதாக கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்