தைப்பே: தைவான் அதன் 113வது தேசிய தினத்தை அக்டோபர் 10ஆம் தேதியன்று கொண்டாட இருக்கிறது.
அன்று தைவானிய அதிபர் லாய் சிங் டி சிறப்புரையாற்றுவார்.
அவர் உரையாற்றிய பிறகு, தைவான் அருகில் சீனா போர்ப் பயிற்சியில் ஈடுபடும் சாத்தியம் அதிகம் இருப்பதாகத் தைவானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தைவானைத் தனது ஒரு பகுதியாக சீனா கருதுகிறது.
இதைத் தைவான் மறுக்கிறது.
தைவானிய அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பிரிவினைவாதச் செயல்களாக சீனா பார்க்கிறது.
எனவே, அதிபர் லாய்யின் தேசிய தின உரைக்குத் ‘தண்டனை’யாக தைவானைச் சுற்றி சீனா போர்ப் பயிற்சியில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம், தைவானின் அதிபராக திரு லாய் பதவி ஏற்ற பிறகு, தைவானைச் சுற்றி சீனா போர்ப் பயிற்சியை நடத்தியது.
தொடர்புடைய செய்திகள்
போர்ப் பயிற்சியில் சீனாவின் போர் விமானங்களும் ஈடுபட்டன.
சீனா நடத்திய போர்ப் பயிற்சி குறித்து அமெரிக்கா உட்பட பல நாடுகள் அக்கறை தெரிவித்தன.