தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட 6 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் சீனா செல்ல விசா தேவையில்லை

1 mins read
95c121e5-a69e-49d4-8e18-85c6584d2dfe
சீனா, விசா இல்லாத நுழைவு அனுமதிக் கொள்கையை 54 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: இந்த ஆண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் வரை, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சீனா செல்ல விசா தேவையில்லை.

அந்த ஆறு நாடுகளையும் சேர்ந்த வர்த்தகப் பயணிகள், சுற்றுப்பயணிகள், உறவினர் அல்லது நண்பர்களைக் காணச் செல்வோர் போன்றோருக்கு இது பொருந்தும். 15 அல்லது அதற்குக் குறைவான நாள்கள் தங்க விரும்பும் இடைவழிப் பயணிகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும்.

சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், நவம்பர் 24ஆம் தேதி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

கூடுதலான சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான கொவிட் -19 கட்டுப்பாடுகளை முன்னிட்டு சீனா தனது வெளியுறவுத் தொடர்பைத் துண்டித்திருந்தது.

தற்போது, சுற்றுலாத் துறையைப் புதுப்பிக்கவும் அனைத்துலக விமானப் பாதைகளை மீட்டெடுக்கவும் சீனா அண்மைய மாதங்களில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இம்மாதத் தொடக்கத்தில், சீனா தனது விசா இல்லாத போக்குவரத்துக் கொள்கையை நார்வே உட்பட 54 நாடுகளுக்கு விரிவுபடுத்தியது. ஜூலையில் சிங்கப்பூர், புருணை குடிமக்கள் விசா இல்லாமல் 15 நாள் பயணம் மேற்கொள்ள அது அனுமதி வழங்கியது.

ஆகஸ்ட் மாதம், சீனாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கொவிட்-19 மருத்துவச் சோதனை நடைமுறைகளை அந்நாடு கைவிட்டது.

குறிப்புச் சொற்கள்