ஜப்பானின் வாழ்த்துச் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா

ஜப்பானின் வாழ்த்துச் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா

1 mins read
e1c320d9-67c0-4735-ba7f-a7113f9b6588
வில்லியன் லாய் சிங்-தே அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பேரணியில் கொண்டாடிய காட்சி. - படம்: இபிஏ

பெய்ஜிங்: தைவான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற லாய் சிங்-தேவுக்கு ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோக்கோ கமிகாவா வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, அதை உறுதிபட எதிர்ப்பதாக ஜப்பானில் உள்ள சீன தூதரகம் ஜனவரி 14ஆம் தேதியன்று தெரிவித்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தைவானை ‘முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பங்காளி, முக்கியமான ஒரு நண்பர்’ என்று குறிப்பிட்டு ஜப்பானிய வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கமிகாவா லாய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக, லாயையும் அவரின் வெற்றியையும் குறிப்பிடாமல், கமிகாவாவின் கருத்து ‘சீன உள்நாட்டு விவகாரங்களில் கடுமையான தலையீடு’ எனக் கருதப்படுவதாக அதன் அதிகாரபூர்வ ‘வீசேட்’ கணக்கில் ஜப்பானின் சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டது.

பெரும்பாலான நாடுகளைப் போல் தைவானுடன் அதிகாரத்துவ தூதரக உறவுகள் எதுவும் ஜப்பானுக்கு இல்லை. சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்த இது ஒரு முன்நிபந்தனையாக இருந்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்