தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நாடு தழுவிய மானியங்களுக்குச் சீனா திட்டம்

1 mins read
4f7351a8-036e-4d36-83d3-ce1cf2300f0b
சீனா அதன் ஒரு குழந்தைக் கொள்கையை ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு கைவிட்டது. இருப்பினும், அண்மைய ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: குழந்தைகளைப் பெற்றெடுக்க தம்பதியரை ஊக்குவிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள குடும்பங்களுக்கு ரொக்கம் வழங்க சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சீனாவின் மக்கள்தொகை கடந்த பல ஆண்டுகளாகக் குறைந்து வருவதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்றும் அதற்குப் பிறகும் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (S$640) வழங்க சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இக்குழந்தைகள் மூன்று வயதாகும் வரை இந்த நாடு தழுவியத் திட்டத்தின்கீழ் அவர்களுக்கு இத்தொகை வழங்கப்படும்.

சீனா அதன் ஒரு குழந்தைக் கொள்கையை ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு கைவிட்டது. இருப்பினும், அண்மைய ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது.

2024ஆம் ஆண்டில் சீனாவில் 9.54 மில்லியன் குழந்தைகள் பிறந்தன. 2016ஆம் ஆண்டில் 18.8 மில்லியன் குழந்தைகள் பிறந்தன.

உலகிலேயே இரண்டாவது ஆகப் பெரிய பொருளியலான சீனாவுக்கு குறைந்து வரும் குழந்தைப் பிறப்பு விகிதம் கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது.

ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற நிலையை 2023ஆம் ஆண்டில் இந்தியாவிடம் சீனா இழந்தது.

குறிப்புச் சொற்கள்