தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிளாஸ்டிக் பொருள் குவிப்புக்கு எதிராக அமெரிக்காவுக்கு சீனா அதிக வரி விதிப்பு

1 mins read
e5a0fe14-545e-4f38-82fe-809b2cdde00c
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தைவான் போன்ற நாடுகளுக்கும் சீனா வரியை அதிகரித்து உள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு சீனா அதிகமான வரியை வித்தித்து உள்ளது.

பிளாஸ்டிக் பொருள் குவிப்புக்கு எதிரான அந்த வரி உயர்வை சீன வர்த்தக அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (மே 18) அறிவித்தது.

அமெரிக்காவுக்கு ஆக அதிகமாக 74.9 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. அதற்கு அடுத்த நிலையில் 34.5 விழுக்காடு வரி ஐரோப்பிய ஒன்றிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு விதிக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.

அதேபோல, ஜப்பானுக்கு 35.5 விழுக்காடு வரியும் தைவானில் இருந்து இறக்குமதியாகும் பொதுவான பொருள்களுக்கு 32.6 விழுக்காடு வரியும் சீனா விதிக்கிறது.

செப்பு, துத்தநாகம் போன்ற உலோகப் பொருள்களுக்கு பகுதி அளவு மாற்றாகப் பயன்படுத்தப்படும் பிஓஎம் கோபாலிமர்ஸுக்கு அந்த வரி விதிக்கப்படுகிறது. இது ஒருவகை பொறியியல் பிளாஸ்டிக் ஆகும்.

பிளாஸ்டிக் பொருள்களை சீனாவில் கொண்டு வந்து குவிப்பது தொடர்பான விவகாரத்தை கடந்த ஆண்டு மே மாதம் சீன அரசாங்கம் தொடங்கியது. விசாரணை முடிவுற்று, இவ்வாண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருள் குவிப்புக்கு எதிரான நடவடிக்கையை சீனா எடுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்