எதிர்பார்ப்புகளுக்கு இடையே டிரம்ப், ஸி இரண்டாம் நாள் மாநாடு

எதிர்பார்ப்புகளுக்கு இடையே டிரம்ப், ஸி இரண்டாம் நாள் மாநாடு

1 mins read
இருநாடுகளின் உறவு வலுப்பெறும் என எதிர்பார்க்கலாம்: டிரம்ப்
50ca8308-d48d-4552-98e6-7aec43e80371
சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் மதிய விருந்தில் கலந்துகொண்ட பிறகு வெள்ளிக்கிழமை (மே 15) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நாடு திரும்புவார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இரண்டு நாள் சீனப் பயணம் வெள்ளிக்கிழமையுடன் (மே 15) நிறைவு பெறுகிறது.

சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அவர் முதல்நாள் சந்தித்தபோது சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இருப்பினும், தைவான் குறித்துச் சீனா விடுத்த எச்சரிக்கை முன்னிலை பெற்றது.

அதை முறையாகக் கையாள அமெரிக்கா தவறினால், மிகவும் மோசமான நிலைக்கு இருநாட்டு உறவுகள் சென்றுவிடும் என்று சீன அதிபர் ஸி அமெரிக்காவுக்கு நினைவூட்டியிருந்தார்.

கடைசியாக 2017ஆம் ஆண்டில் திரு டிரம்ப் சீனா சென்றிருந்தார். அதற்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் சீனா செல்வது இப்போதுதான்.

உள்நாட்டில் அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கும் அதிபர் டிரம்ப், அவரின் சீனப் பயணத்தால் பல நேர்மறையான விளைவுகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறார்.

தமது சமூக ஊடகப்பதிவில், “சீனாவுடன் அமெரிக்காவின் உறவு முன்னெப்போதையும் விட வலுப்பெற்றுச் சிறப்படையும் என எதிர்பார்க்கலாம்,” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா சீனாமீது விதித்த வர்த்தகத் தடைகளை நிறுத்தியதைத் தொடர்வதும் அரிய கனிம வளங்களின் விநியோகத்தைச் சீனா உலக அளவில் கட்டுப்படுத்துவதைத் தவிர்ப்பதும் இந்த மாநாட்டின் முக்கிய இலக்குகளாக விளங்கின.

குறிப்புச் சொற்கள்