58 பேருடன் கள்ள உறவு; ‘அழகிய ஆளுநர்’க்குச் சிறை

1 mins read
b184c9fe-9936-4ac9-b1e3-a72c089dcf95
ஜனவரி மாதம் யாங்கின் கள்ள உறவுகள், ஊழல் தொடர்பாக ஆவணப்படம் ஒன்று வெளியானது. - படம்: சைனா டெய்லி

பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் அரசாங்க அதிகாரி ஜாங் யாங் சட்டத்தை மீறியதற்காக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 183,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

52 வயது யாங், 58 ஆண் அதிகாரிகளுடன் பாலியல் ரீதியாக கள்ள உறவு வைத்திருந்தார் என்றும் அவர் 10 மில்லியன் வெள்ளி லஞ்சமாகப் பெற்றதாகவும் நீதிமன்றத்தில் நிரூபமானது.

யாங் இதற்கு முன்னர் சீனாவின் தென்மேற்கில் உள்ள சின்னான் பகுதிக்கு ஆளுநராகவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவரின் அழகைக் கண்டு அவருக்கு ‘அழகிய ஆளுநர்’ என்ற செல்லப் பெயரும் அப்பகுதியில் உண்டு.

இவ்வாண்டு ஜனவரி மாதம் யாங்கின் கள்ள உறவுகள், ஊழல் தொடர்பாக ஆவணப்படம் ஒன்று வெளியானது. அதில் யாங்கின் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்னரே சீன லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் யாங்கின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அதுவும் ஆவணப் படத்தில் காண்பிக்கப்பட்டது.

தமது தவறுகளுக்கு யாங் வருத்தம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்