தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைதியை நிலைநாட்ட சீனாவின் ஒத்துழைப்பு தேவை: தென்கொரிய அதிபர்

1 mins read
029decfe-ca72-40bc-80d9-184fdebf5bdd
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட சீன அதிபர் ஸி ஜின்பிங். - படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியா - ரஷ்யா இடையே உள்ள ராணுவ ஒத்துழைப்பையும் தாண்டி வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்ட சீனாவின் ஒத்துழைப்பு தேவை எனத் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கூறினார்.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் தென்கொரிய அதிபரும் கலந்துகொண்டனர்.

அந்த மாநாட்டிற்கு இடையே நடந்த சந்திப்பில் தென்கொரியாவும் சீனாவும் இணைந்து வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும் என தென்கொரிய அதிபர் சீன அதிபரைக் கேட்டுக்கொண்டதாகத் தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் சனிக்கிழமையன்று (நவம்பர் 16) தெரிவித்தது.

“வடகொரியாவின் தொடர்ச்சியான தூண்டுதல், உக்ரேனில் நடக்கும் போர், ரஷ்யா - வடகொரியா ராணுவ ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட்டாரத்தில் நீடித்த நிலைத்தன்மையையும் அமைதியையும் மேம்படுத்துவதற்கு தென்கொரியாவும் சீனாவும் ஒத்துழைக்கும்,” எனத் திரு யூன் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்