தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவில் உள்நாட்டுச் சுற்றுலா விழா

1 mins read
04b4df31-b1d2-493f-8067-b70de7b6a211
பெய்ஜிங்கில் உள்ள ‘ஹேப்பி வேலி’ கேளிக்கைப் பூங்காவில் உள்ள ‘ரொலர் கோஸ்டர்’ வாகனங்கள் விழாக்காலத்தில் தினமும் காலையில் சோதனையிடப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் உள்நாட்டுச் சுற்றுலா விழா அக்டோபர் 1 தொடங்கி, 8ஆம் தேதி வரை ‘தங்க விடுமுறை வாரம்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மில்லியன்கணக்கான பயணிகள் சீனாவில் உள்ள கேளிக்கை இடங்களுக்கும் பெருஞ்சுவர் போன்ற மையங்களுக்கும் சுற்றுலா செல்வர்.

சீனப் போக்குவரத்து அமைச்சு அக்டோபர் 1ஆம் தேதியன்று, 335.8 மில்லியன் மக்கள் பலவிதப் பயணங்கள் செய்ததை குறிப்பிட்டுள்ளது. ஹாங்சுவில் உள்ள மேற்கு ஏரி தொடங்கி, உலகின் மிகவும் செங்குத்தான மலையேற்றப் பாதைகள் நிறைந்த சான்சி மாநிலத்தின் ஹுவா பகுதி வரையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சீன அரசாங்கம் அதிகரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நிகழ்நேரத்தில் கூட்ட நெரிசல்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அதிகாரிகளை அரசு பணியமர்த்தியுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மீண்டெழுந்துள்ள சுற்றுலாத் துறை சீனாவின் சரிந்து வரும் பொருளியலுக்கு புத்துயிர் ஊட்டும் அதே சமயம், அந்நாட்டின் உள்கட்டமைப்புக்கு சவாலாகவும் அமைந்துள்ளது.

எதிர்பாராத ஆபத்திற்கு வாய்ப்புள்ள, அவசரகாலத்தில் மக்கள் அதிகம் செல்லாத சுற்றுலாத் தலங்கள் உட்பட, அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அவற்றை மாநில அரசாங்கங்கள் கருத்தில்கொள்ளவேண்டும் என்று சுற்றுலாத் துறையின் நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்