சீனாவின் பொருளியல் இவ்வாண்டின் முதல் பாதியில் 5.3 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக அதிகாரபூர்வத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இத்தகவல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வெளியிடப்பட்டது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக ரீதியில் பதற்றநிலை நிலவுகிறது. இதன் விளைவாக இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சீனாவின் பொருளில் வளர்ச்சி மெதுவடைந்துள்ளது. இருப்பினும் அதன் பொருளியல் வளர்ச்சி 5.3 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.
முழு ஆண்டு பொருளியல் வளர்ச்சி ஏறத்தாழ 5 விழுக்காடாகப் பதிவாக வேண்டும் என்று சீன அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் பொருளியல் 5.4 விழுக்காடு ஏற்றம் கண்டது. இரண்டாம் காலாண்டில் அது 5.2 விழுக்காடாகக் குறைந்தது. இதற்கு வர்த்தகப் பதற்றநிலை காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
மே மாதம் நடுப்பகுதியில், பேச்சுவார்த்தைகளுக்காக வரிவிதிப்பு ஒத்திவைக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இதனால் சீனாவின் பொருளியல் பெரும் சரிவைத் தவிர்த்தது எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டு சீனாவுக்குச் சவால்மிக்கதாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்றுமதி மெதுவடைந்ததும் பயனீட்டாளர்களின் நம்பிக்கை தொடர்ந்து குறைவாக இருப்பதும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.