சீனாவின் புதிய அதிவேக ரயில் 50,000 கி.மீட்டரைக் கடந்தது

1 mins read
b2467bc4-7fd1-4a69-a108-6f0e98b98b87
சீனாவின் ரயில்வே கட்டமைப்பு 2020ல் 32 விழுக்காடு விரிவடைந்துள்ளது. - படம்: அன்ஸ்பிளாஷ்

பெய்ஜிங்: சீனாவின் அதிவேக ரயில்வே கட்டமைப்பு 50,000 கி. மீட்டர் பயணத்தைக் கடந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.

உலகின் ஆகப் பெரிய ரயில்வே கட்டமைப்பைச் சீனா கொண்டுள்ளது.

புதிய அதிவேக ரயில் பாதை, புகழ்பெற்ற டெரகோட்டா வாரியர்ஸ் இடம்பெற்றுள்ள சியான் நகரில் தொடங்கி அதன் வடக்கே உள்ள யனானில் முடிவடைகிறது என்று தேசிய ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி கூறியது.

இரண்டு நகரங்களும் வடக்கு சீனாவின் ஷான்ஸி மாநிலத்தில் உள்ளன.

அதிவேக ரயில் பாதை அமைப்பதற்காகச் சில வீடுகள் இடிக்கப்பட்டன. இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்களின் குடும்பத்துக்கு 5,000 யுவான் (S$910) வழங்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் 2020ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது தெரிவித்தனர்.

சீனாவின் ரயில்வே கட்டமைப்பு 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32 விழுக்காடு விரிவடைந்துள்ளது.

ஸியான்-யான் பாதை மொத்தம் 299 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இப்பாதையில் சி9309 என்ற ரயில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுகிறது. இது, ஜப்பானின் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயிலைவிட வேகமானது.

பெய்ஜிங், அதன் பொருளியல் பாதை முயற்சியின்கீழ் உலக நாடுகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி அளித்து வருகிறது. ஆனால் பல திட்டங்கள் முடங்கியுள்ளன அல்லது சர்ச்சையில் சிக்கியுள்ளன.

குறிப்புச் சொற்கள்