தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்க்கும் சீனா

1 mins read
5318ed9f-7e0c-4c89-82c7-768fb9bb97fe
படம்: - ஏஎஃப்பி

பெய்ஜிங்: தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்க்க சீனா முழுவீச்சில் தயாராகியுள்ளது. இவ்வாரம் முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிறப்பு விசாக்களை அது வழங்கவுள்ளது.

அண்மையில் அமெரிக்க அரசாங்கம் ஹெச்-1பி (H-1B) விசாகளுக்கான கட்டணத்தை 100,000 டாலராக மாற்றியது. இதனால் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி தொழில்நுட்ப உலகில் சீனா தன்னை பெரும் சக்தியாகக் காட்ட முனைவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

சீனாவில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக் கணினிப் பொறியாளர்கள் உள்ளனர். ஆனால் வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கினால் நாட்டிற்குள் மேலும் புதிய முதலீடுகள் வரும் என்று சீனா நம்புகிறது.

சீனாவில் வெளிநாட்டு முதலீடு, பயணத்துறை அதிகரிக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முதலீடுகளுக்காக சீன பல ஐரோப்பிய நாட்டு மக்களுக்கான விசா கட்டணத்தையும் நீக்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணக்கியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சீனா கே (K) விசா வழங்குவதாக அறிவித்தது.

சீனாவிற்குள் வேலை கிடைக்காமலே தங்க அந்தக் கே விசா உதவும். அமெரிக்காவில் வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு இது பெரிய அளவில் உதவக்கூடும்.

சீனாவைப் போலவே அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் வேலை கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்கத் தென் கொரியா, ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகள் வேலை விசா வழங்குவதில் சில நீக்குப்போக்கான விதிமுறைகளை அறிவித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்