தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சீனாவின் மக்கள்தொகை சரிவு

1 mins read
e049101b-e5bf-46b4-b4b9-7e6e827c849d
வரும் ஆண்டுகளில் மக்கள்தொகை மேலும் குறையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகச் சரிந்துள்ளது.

குழந்தைப் பிறப்பு சற்று அதிகரித்துள்ளபோதிலும் இறந்தோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அது குறைவு.

வரும் ஆண்டுகளில் மக்கள்தொகை மேலும் குறையக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு குழந்தைக் கொள்கை, நகரமயமாதல் ஆகிய காரணங்களால் சீனாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை 1.39 மில்லியன் குறைந்து 1.408 பில்லியனாகப் பதிவானது என அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத்துறை ஜனவரி 17ஆம் தேதியன்று தெரிவித்தது.

2023ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகை 1.409 பில்லியனாக இருந்தது. 2024ஆம் ஆண்டில் சீனாவில் 9.54 மில்லியன் குழந்தைகள் பிறந்தன. 2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9.02 மில்லியனாக இருந்தது.

2024ஆம் ஆண்டில் ஒவ்வொரு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகள் பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சீனாவில், கடந்த ஆண்டு 10.93 மில்லியன் பேர் மரணமடைந்தனர். இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 11.1 மில்லியனாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்