பெய்ஜிங்: சீனப் புத்தாண்டை முன்னிட்டு சீனாவில் ஒன்பது நாள் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் பல மில்லியன் சீன குடிமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் சீனர்கள் தங்களது பட்டியலிலிருந்து ஜப்பானை நீக்கியுள்ளனர்.
தைவான் தொடர்பில் சீனாவுக்கு எதிராக ஜப்பான் உள்ளது. இதனால், ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பெய்ஜிங் அதன் மக்களை தோக்கியோ செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது.
அதேபோல், ஜப்பானில் சீனர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் சில செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனாலும், சீன நாட்டினர் ஜப்பானைத் தவிர்க்கின்றனர்.
சீனக் குடிமக்களின் பட்டியலில் தென்கொரியா முதல் இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 250,000 பேர் தென்கொரியா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்னாம், துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளும் சீனக் குடிமக்களிடம் பிரபலமாக உள்ளது.
கடந்த ஆண்டு சீனப் புத்தாண்டு காலத்துடன் இவ்வாண்டு ஒப்பிடுகையில் ஜப்பானுக்குச் செல்லும் சீனக் குடிமக்களின் எண்ணிக்கை 60 விழுக்காடு சரியும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சீனாவில் வசந்த காலப் பண்டிகைக் காலம் 40 நாள்கள் இருக்கும் என்பதால் இந்த நாள்களில் 9.5 பில்லியன் பயணங்கள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

