தாயகம் திரும்பும் பாண்டா கரடி; காத்திருக்கும் மில்லியன்கணக்கான மக்கள்

1 mins read
bce44eb9-4739-43f0-879c-c0cd178dfca1
படம்: ராய்ட்டர்ஸ் -

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து தனது சொந்த நாடான சீனாவுக்குத் திரும்பியுள்ளது பாண்டா கரடி யா யா.

மெம்பிஸ் விலங்கியல் தோட்டத்தில் இருந்த 22 வயது யா யா கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 8) சீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் யா யாவின் துணையான ஆண் பாண்டா கரடி லே லே மாண்டுபோனது.

அதனைத் தொடர்ந்து கரடிகள் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்று கேள்விகள் எழுந்தன. சீன நாட்டினர் பலரும் அமெரிக்காவைக் குறைகூறினர்.

கரடிகள் நல்ல முறையில் கவனிக்கப்படுவதாக அமெரிக்காவும் அதற்கு பதில் தெரிவித்தது.

யா யா கரடி அமெரிக்காவில் இருந்து புறப்படும் காணொளி இணையம்வழி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அதனை மில்லியன்கணக்கான மக்கள் பார்வையிட்டு தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.

யா யா கரடி 2003ஆம் ஆண்டு அமெரிக்காவின் டென்னிஸி நகருக்கு ஒப்பந்த அடிப்படையில் சீனாவில் இருந்து கொண்டுசெல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்