சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா செல்கிறார்

1 mins read
e1b47044-0474-45cd-8939-4cb987d986dd
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி. - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, திங்கள் (ஆகஸ்ட் 18) முதல் புதன்கிழமை வரை இந்தியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார்.

சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சு நடத்துவதற்காக அவர் இந்தியா செல்வதாக சீன வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

2020ல் இரு நாடுகளும் எல்லையில் கடுமையாக மோதிக்கொண்ட பிறகு இது அவரது இரண்டாவது பயணமாகும்.

இமயமலை எல்லையில் சுற்றுக் காவலில் ஈடுபடுவது தொடர்பாக கடந்த அக்டோபரில் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரு பெரிய ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சீரடைந்து வருகின்றன. இது, வர்த்தகம், முதலீடு மற்றும் விமானச் சேவை போன்றவற்றை பாதித்த ஐந்து ஆண்டுக்கால முட்டுக்கட்டைக்கு தீர்வு கண்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வட்டாரப் பாதுகாப்புக் கூட்டமான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏழு ஆண்டுகளில் முதல் பயணமாக சீனா செல்கிறார். அப்போது சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அவர் சந்திக்கவிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்