கொவிட்-19 குறித்து தகவல் வெளியிட்ட ஆடவர் 3 ஆண்டுக்கு பிறகு விடுதலை

கொவிட்-19 குறித்து தகவல் வெளியிட்ட ஆடவர் 3 ஆண்டுக்கு பிறகு விடுதலை

1 mins read
a6074e0c-ff62-48ca-86c8-0e80b9b2684c
படம்: ராய்ட்டர்ஸ் -

சீனாவில் கொவிட்-19 குறித்து தகவல் வெளியிட்ட ஆடவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை பெறவுள்ளார்.

கொவிட்-19 நோய்த்தொற்று தொடங்கிய காலத்தில் ஃபாங் பின் என்ற ஆடவர் சீன மருத்துவமனைகளில் மக்கள் மாண்டுகிடப்பதையும் கூட்டம் அதிகமாக இருப்பதையும் காணொளியாக வெளியிட்டார்.

அதன் பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை என ஃபாங்கின் நண்பர்களும் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.

ஆடவர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) விடுதலை செய்யப்படுகிறார் என்று அவர்கள் கூறினர்.

இருப்பினும் ஆடவர் விடுதலைக் குறித்து சீன அதிகாரிகள் எந்தவித தகவல்களையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

ஆடவரை கைது செய்ததற்கும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கும் சீனாவின் மீது பலர் குறைகூறினர்.

குறிப்புச் சொற்கள்