சுரங்க விபத்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தச் சீன அதிபர் உத்தரவு

சுரங்க விபத்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தச் சீன அதிபர் உத்தரவு

1 mins read
bc2e0a1e-201f-4175-9623-f0607e5d8ab4
சின்யுவென் மாநிலத்தில் உள்ள லியு‌ஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயு வெடிப்பில் எட்டுப் பேர் மாண்டனர். - படம்: சின்ஹுவா / யொன்ஹப்

சீனா: சீனாவின் ‌‌ஷான்சி மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்க வெடிப்பு விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 50க்கு உயர்ந்துள்ளது. பலர் சுரங்கத்தின் இடிபாடுகள் சிக்கியுள்ளனர்.

சீன அதிபர் ஸி ஜின்பிங், வெடிப்பு ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சின்யுவென் மாநிலத்தில் உள்ள லியு‌ஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை (மே 22) ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் எட்டுப் பேர் மாண்டதுடன் 38 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை (மே 22) லியு‌ஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிப்பு ஏற்பட்டபோது ஏறக்குறைய 247 பேர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர்.

காயமைடைந்தோருக்குத் துரிதமாகச் சிகிச்சையளிக்கவும் தேடல், மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்குத் திரு ஸி உத்தரவிட்டார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து சட்டத்துக்கு ஏற்ப சம்பந்தப்பட்டோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறினார்.

திரு ஸியின் கருத்தை முன்மொழிந்த பிரதமர் லீ சியாங், விரைவாகவும் துல்லியமாகவும் விபத்து குறித்த தகவல்களைத் திரட்டும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மே 23) நிலவரப்படி, 201 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் மாண்ட எட்டுப் பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்