அமெரிக்காவை எச்சரிக்கும் சீன வெளியுறவு அமைச்சர்

1 mins read
caa4c11a-8603-4600-94b4-1f13981fa7d1
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ  - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: வரி விதிப்பால் அமெரிக்கா எதைச் சாதித்துவிட்டது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனாவில் தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு அதிகாரிகள் கலந்து பேசி வருகின்றனர். அந்நிகழ்வில் பங்கேற்றபோது செய்தியாளர்களிடம் திரு வாங் யீ அமெரிக்கா குறித்து கருத்து தெரிவித்தார்.

சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட அனைத்து வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சீனாவை அடக்கி ஆளவும் அதே நேரம் அதனுடன் நட்பு பாராட்டவும் எந்த நாடாலும் முடியாது. இரண்டு கொள்கையுடன் செயல்பட்டால் உறவு நிலைக்காது,” என்று வாங் யீ எச்சரித்தார்.

சீனாமீது டிரம்ப் நிர்வாகம் வரிவிதிப்பை அதிகரித்தது. அதற்குப் பதிலடி தரும் விதமாக பெய்ஜிங்கும் வா‌ஷிங்டன்மீது வரிவிதிப்பைக் கூட்டியது.

குறிப்புச் சொற்கள்