தைவானின் கிழக்குக் கடலோரப் பகுதியில் சீனப் போர்க்கப்பல்கள்

1 mins read
563a1065-b2cf-4963-84a6-0d674e94926a
சீனாவுக்குச் சொந்தமான அந்தப் போர்க்கப்பல்களை தைவான் மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தைவானியத் தற்காப்பு அமைச்சு கூறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவானின் கிழக்குக் கடலோரப் பகுதியில் போர் விமானங்களை ஏந்திக்கொண்டு சீனப் போர்க்கப்பல்கள் சென்றுகொண்டிருந்ததைத் தமது அதிகாரிகள் பார்த்ததாக தைவானியத் தற்காப்பு அமைச்சு செப்டம்பர் 18ஆம் தேதியன்று தெரிவித்தது.

ஜப்பானின் தென்முனையில் உள்ள யொனாகுனித் தீவை நோக்கி அக்கப்பல்கள் சென்றுகொண்டிருந்ததாக அது கூறியது.

தைவானைத் தனது ஒரு பகுதியாக சீனா கருதுகிறது.

இதைத் தைவான் ஏற்க மறுக்கிறது.

இதனால் தைவானுக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அத்தீவைச் சுற்றி சீனா பல போர்ப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

சீனாவுக்குச் சொந்தமான அந்தப் போர்க்கப்பல்களை தைவான் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தைவானியத் தற்காப்பு அமைச்சு கூறியது.

இந்த விவகாரம் குறித்து சீனா கருத்து தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்