பிலிப்பீன்ஸ் அதிபர் மார்க்கோசுக்கு எதிராகப் புகார்

1 mins read
8dd0337c-c0bd-4764-8a85-2617149e37da
அரசாங்கம் மீது பிலிப்பீன்ஸ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு அதிபர் மார்க்கோஸ் துரோகம் இழைத்துவிட்டதாகப் புகார் அளித்த அரசு சார்பற்ற அமைப்புகள் தெரிவித்தன. - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியருக்கு எதிராக அரசு சார்பற்ற அமைப்புகள் வியாழக்கிழமை (ஜனவரி 22) புகார் அளித்தன.

போலி வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்காக அதிபர் மார்க்கோஸ் வரி பணத்தைப் பயன்படுத்துவதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.

கடந்த ஓராண்டில், சக்திவாய்ந்த புயல்களாலும் கரைபுரண்டோடிய வெள்ளத்தாலும் பிலிப்பின்ஸ் மிகக் கடும் பாதிப்புக்கு உள்ளானது.

இதையடுத்து, வெள்ளத் தடுப்பு உள்கட்டமைப்புகள் கட்டப்படும் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், வெள்ளத் தடுப்பு உள்கட்டமைப்புகள் கட்டப்படவில்லை என்றும் மாறாக, ஒதுக்கப்பட்ட நிதியை அதிபர் மார்க்கோஸ் தமக்கு நெருக்கமானவர்களுக்குத் தந்துவிட்டார் என்றும் குறைகூறப்படுகிறது.

அரசாங்கம் மீது பிலிப்பீன்ஸ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு அதிபர் மார்க்கோஸ் துரோகம் இழைத்துவிட்டதாகப் புகார் அளித்த அமைப்புகள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்