டுட்டர்டே மீது மனித உரிமைக் அமைப்பிடம் புகார்

1 mins read
70e35dba-32cf-47ee-b977-df9ed93ba28f
முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்டிகோ டுட்டர்டே. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டர்டே மீது ஐக்கிய நாட்டு மனித உரிமைகள் அமைப்பிடம் (United Nations Human Rights Committee) புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பிலிப்பீன்சில் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு காவல்துறை நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட ஊழியர்கள், கிளர்ச்சியாளர்களின் குடும்பத்தார் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 8) புகாரைப் பதிவுசெய்தனர். திரு டுட்டர்டே, முன்னாள் பிலிப்பீன்ஸ் தேசிய காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது புகார் தரப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ், 1966ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டுச் சபையின் அனைத்துலக சிவில், அரசியல் உரிமைகளுக்கான (UN International Covenant on Civil and Political Rights) சாசனத்தில் கையெழுத்திட்டது. திரு டுட்டர்டே, முன்னாள் பிலிப்பீன்ஸ் தேசிய காவல்துறைத் தலைவர் குவியமோர் எலியாஸார், முன்னாள் கர்னல் லிட்டோ பத்தாய் ஆகியோர் அந்த சாசனத்துக்கு மாறாக நடந்துகொண்டதாக பெண்கள் இருவர் புகார் கொடுத்தினர்.

திரு டுட்டர்டே, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மணிலாவில் அவர் பணியில் ஈடுபடுத்திய ‘டாவோ பாய்ஸ்’ (Davao Boys) என்றழைக்கப்படும் காவல்துறையினர், மக்களுக்கு எதிராக புரிந்த குற்றங்களுக்குப் பொறுப்பேற்கச் செய்யாமல் ஓயப்போவதில்லை என்று புகார் தந்த பெண்களில் ஒருவரான லீஸல் அசுன்சியோன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்