வத்திகனில் பல நாடுகளைச் சேர்ந்த ஆகப் பெரிய கார்டினல் குழு சேர்ந்து புதிய போப்பாண்டவரை வெற்றிகரமாகத் தேர்வு செய்துள்ளனர். முதல் அமெரிக்க போப்பான இவரின் பெயர், ராபர்ட் பிரவோஸ்ட் (Robert Prevost).
உலக கத்தோலிக்க திருஅவையை வழிநடத்தும் 267ஆம் புதிய போப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு ராபர்ட் ’போப் லியோ’ என்று அழைக்கப்படுவார். புதிய போப் தெரிவாகியுள்ள செய்தியைக் கத்தோலிக்கர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனை உலகிற்கு அறிவிக்கும் வகையில், சிங்கப்பூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை (மே 9) அதிகாலை சிஸ்டின் சிற்றாலயத்தின் சிறப்பு புகைப்போக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளியானது.
போப் பிரான்சிஸ் ஏப்ரல் 28ஆம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அடுத்த போப் யார் என்பதைத் தேர்வு செய்ய ரோமன் கத்தோலிக்க கார்டினல்கள் புதிய சிஸ்டின் சிற்றாலயத்துக்குத் திரும்பினர்.
மே 7ஆம் தேதி 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான சடங்குபூர்வ நடைமுறைத் தொடங்கியது. இரு நாள்களாக நிலவிய இத்தேர்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

