தேர்வில் ஏமாற்றுவதைத் தவிர்க்கும் நடவடிக்கையில் குழப்பம்; பதவிவிலகிய தென்கொரிய அமைச்சர்

தேர்வில் ஏமாற்றுவதைத் தவிர்க்கும் நடவடிக்கையில் குழப்பம்; பதவிவிலகிய தென்கொரிய அமைச்சர்

கோப்புப் படம்: யோன்ஹாப்

23 Nov 2026 - 11:55 am

1 mins read

சோல்: தென்கொரியாவில் தேர்வுகளில் ஏமாற்றுச் செயல்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் குழப்பம் நிலவியதைத் தொடர்ந்து அந்நாட்டின் கல்வி அமைச்சர் சொய் கியோ-ஜின் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) பதவிவிலகினார்.

தென்கொரியாவில் கல்லூரிகளில் நுழைவதற்காக நடத்தப்படும் உயரிய தேர்வுகளில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய ஏமாற்றுச் செயல்களைத் தடுக்க கடைசி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் குழப்பம் நிலவியது. அந்தத் தேர்வுகள் சென்ற வாரம் நடத்தப்பட்டன.

திரு சொய் கியோ-ஜின்னின் பதவிவிலகலைத் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் ஏற்றுக்கொண்டார். தேசியத் தேர்வுகளின் நிர்வாகம், அவை சம்பந்தப்பட்ட சட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக மறுபரிசீலனை செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய வரிக் கணக்கர் தேர்வில் ஆக அதிக மதிப்பெண்களைப் பெற்றவர் தேர்வில் சிறிய கேமரா, திறன்பேசி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவசர அவசரமாக மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் முற்பட்டது.

எட்டு மணிநேரம் நீடிக்கும் கல்லூரி நுழைவுத் தேர்வில் கம்பியில்லா இணையச் சேவைப் பயன்பாடு, கருவிகளை ஒளித்துக்கொள்ள உதவும் ஆடை அம்சங்கள் போன்றவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், ஒளித்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய கைப்பேசிகளைக் கண்டுபிடிக்குமாறு நாடு முழுவதும் எச்சரிக்கைக் குறிப்புகள் விடுக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
உலகம்தென்கொரியாகல்விஅமைச்சர்ஏமாற்றுதேர்வு