தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் உணவு விநியோக உதவி ஒருநாள் நிறுத்திவைப்பு

2 mins read
d8b5ef5b-c144-42df-b366-b79433a2a9e8
காஸாவில் ஜூன் 4ஆம் தேதி, சிறுமி உணவுக்காகப் பாத்திரம் ஏந்திப் பிடிக்கிறார். - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆதரிக்கும் சர்ச்சைக்குரிய மனிதாபிமான அமைப்பு ஒன்று, காஸா பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 7) உணவு வழங்கவில்லை.

தனியார் அமெரிக்கப் பாதுகாப்பு, தளவாட நிறுவனங்களைத் தனது செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் காஸா மனிதாபிமான அறநிறுவனம் (ஜிஎச்எஃப்), தன்னால் அங்கு இயங்க முடியாதபடிக்கு ஹமாஸ் மிரட்டல் விடுத்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் இதனைத் தெரிவித்த அறநிறுவனம், மிரட்டல்களை எதிர்கொள்ள தனது செயல்முறைகளை மாற்றுவதாகக் குறிப்பிட்டது. எனினும் மிரட்டல் குறித்த விவரங்களை அது வெளியிடவில்லை.

அந்நிறுவனத்தின் கிளைகளில் ஞாயிற்றுக்கிழமை திறக்கும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அமைப்பு குறிப்பிடும் மிரட்டல்களைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.

ஜிஎச்எஃப் அமைப்பின் செயல்பாடுகள் எல்லா நிலைகளிலும் தோல்வியுற்றதாக ஹமாஸ் நடத்தும் காஸா அரசாங்க ஊடகம் ஜூன் 7ஆம் தேதி தெரிவித்தது.

ஐக்கிய நாடுகள் அனுப்பும் பொருள்களை ஹமாஸ் சூரையாடுவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் விடுக்கும் குற்றச்சாட்டுகளையும் ஹமாஸ் மறுத்துள்ளது.

இதற்கிடையே, சிரியாவின் மஸ்ராத் பெய்த் ஜின்னில் பாலஸ்தீன கிளர்ச்சிக் குழு ஹமாஸ் உறுப்பினர் ஒருவரைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் அங்கு வான்வழித் தாக்குதல் நடத்திய சில நாள்களுக்குப் பிறகு அது அவ்வாறு கூறியது.

இஸ்ரேலை நோக்கி சிரியா, இரண்டு ஏவுகணைகளைப் பாய்ச்சியதற்குப் பதிலடியாகத் தாங்கள் அவ்வாறு செய்ததாக இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சிரியா தரப்பு, ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான செய்தி ஆதாரமற்றது என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்