சர்ச்சைக்குரிய மலேசிய வலைப்பதிவாளர் ராஜா பெட்ரா காலமானார்

சர்ச்சைக்குரிய மலேசிய வலைப்பதிவாளர் ராஜா பெட்ரா காலமானார்

1 mins read
d09a23ea-8702-4eb0-8649-b5547fde511f
தற்போதைய மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரை விடுதலை செய்யக் கோரி ‘ ஃபிரீ அன்வார்’ இயக்கத்துக்கு ராஜா பெட்ரா தலைமை தாங்கினார்.  - படம்: மலேசிய ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் ராஜா பெட்ரா கமாருதீன் பிரிட்டனில் காலமானார். அவருக்கு 74 வயது.

அவரது மரணச் செய்தியை அவரது சகோதரர் ராஜா இட்ரிஸ் வெளியிட்டார்.

ராஜா பெட்ரா, மலேசியா டுடே இணையத்தளத்தை நடத்தி வந்தார்.

ஆகக் கடைசியாக செப்டம்பர் 8ஆம் தேதியன்று அவர் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்தார்.

மலேசியாவின் அண்மைய அரசியல் நிலவரங்கள் பற்றி அவர் தமது கருத்துகளைத் தெரிவித்தார்.

தற்போதைய மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரை விடுதலை செய்யக் கோரி ‘ ஃபிரீ அன்வார்’ இயக்கத்துக்கு ராஜா பெட்ரா தலைமை தாங்கினார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் இருமுறை தடுத்து வைக்கப்பட்டார்.

ராஜா பெட்ரா மீது பல குற்றச்சாட்டுகள் பதிவாகின.

2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.

குறிப்புச் சொற்கள்