டிரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்த நியூயார்க் நீதிமன்றம்

1 mins read
1d37df01-c75b-4d2b-904b-48e8f0954e40
2024ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களமிறங்கத் திட்டமிடும் திரு டோனல்ட் டிரம்ப் தாம் குற்றம் ஏதும் புரியவில்லை என்று மறுத்துவருகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வைத்த கோரிக்கையை நியூயார்க் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பொய்யான சொத்துக் கணக்கு காட்டியதாக திரு டிரம்ப் மீதும் அவரது குடும்பத் தொழில் மீதும் தலைமைச் சட்ட அதிகாரி லெட்டிஷியா ஜேம்ஸ் 2022 செப்டம்பரில் வழக்குத் தொடுத்திருந்தார்.

கடன்கொடுப்போரிடமிருந்தும் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்தும் மேம்பட்ட அனுகூலங்களைப் பெறும் நோக்கில் அவர் அவ்வாறு செயல்பட்டதாகக் கூறப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் திரு டிரம்ப் மேல்முறையீடு செய்திருந்தார்.

தலைமைச் சட்ட அதிகாரி தொடுத்த வழக்கில், திரு டிரம்ப்பும் அவரது மகன்கள் டோனல்ட் ஜூனியர், எரிக் இருவரும் இழப்பீடாகக் குறைந்தது $250 மில்லியன் அமெரிக்க டாலர் (S$337 மில்லியன்) செலுத்தவேண்டும் என்றும் டிரம்ப் குடும்பத்தினர் நியூயார்க்கில் தொழில் நடத்தத் தடை விதிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், திரு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்புக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்