பேங்காக்: தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் யாகி புயல் பலமாக வீசியுள்ளது. அதனால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
புயலால் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமாகின. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் மக்களை பாதுகாக்கவும் தாய்லாந்து அரசாங்கம் ராணுவத்தை களமிறக்கியுள்ளது.
நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சியாங் மாய், சியாங் ராய் மாநிலங்களில் மட்டும் 9,000க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை கனத்த மழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதனால் தாய்லாந்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மீட்புபடையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.