தரவுக் கசிவு கட்டாய வெளியிடுதல் சட்டம்: ஓப்பன்ஏஐ, ஆந்த்ரோபிக் ஆதரவு

தரவுக் கசிவு கட்டாய வெளியிடுதல் சட்டம்: ஓப்பன்ஏஐ, ஆந்த்ரோபிக் ஆதரவு

(படம்: ராய்ட்டர்ஸ்

06 Oct 2026 - 7:19 pm

1 mins read

சிட்னி: செயற்கை நுண்ணறிவுக் (ஏஐ) கருவிகளால் ஏற்படும் தகவல் கசிவு, பாதுகாப்பு மீறல்கள் குறித்து அரசுக்குக் கட்டாயமாகத் தெரிவிக்க வலியுறுத்தும் சட்டத்தைத் தாங்கள் வரவேற்பதாக ஓப்பன்ஏஐ, ஆந்த்ரோபிக் நிறுவனங்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளன.

தற்போது இத்தகைய சம்பவங்கள் அதிகாரிகளுக்கு அறிவிப்பது தங்களின் தனிப்பட்ட விருப்பத் தேர்வாகவே உள்ளது என்பதை இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டன.

ஆஸ்திரேலியாவின் முக்கிய சுகாதாரத் தளம், மூன்று அரசுத் தளங்களில் ஓப்பன்ஏஐ ஊடுருவிய தகவலை அரசுக்குத் தெரிவிக்க அந்த நிறுவனம் மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டது கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னணியில், தரவுக் கசிவு குறித்து கட்டாயமாக வெளியிடும் சட்டத்துக்கு ஓப்பன்ஏஐ-யின் தலைமை உத்திபூர்வ அதிகாரி ஜேசன் குவான் ஆதரவு தெரிவித்தார். ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் டேவிட் மாஸ்டர்சும் இத்தகைய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆன்டனி அல்பனீசின் அரசாங்கம் புதிய ஏஐ சட்டங்களை உருவாக்கி வரும் வேளையில், தரவு மையங்கள், பதிப்புரிமைப் பாதுகாப்பு தொடர்பான விதிகளைக் கடுமையாக்கக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிக்க தங்களின் படைப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் என்ற தற்போதைய பதிப்புரிமைச் சட்டத் தளர்வுக்கு ஆஸ்திரேலிய ஊடகப் படைப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்