தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலியத் தாக்குதலில் ஒன்பது பிள்ளைகளை இழந்த காஸா மருத்துவர் மரணம்

1 mins read
88ee51a8-1d3b-4c79-8db4-366b96b4a0e3
டாக்டர் ஹம்தி அல் நஜ்ஜாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

கான் யூனிஸ்: கடந்த வாரம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காயமுற்ற காஸாவின் கான் யூனிசைச் சேர்ந்த மருத்துவரான டாக்டர் ஹம்தி அல் நஜ்ஜார் இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) தெரிவித்தன.

அவருடைய பத்தில் ஒன்பது பிள்ளைகள் இத்தாக்குதலில் கடந்த வாரம் கொல்லப்பட்டனர். சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வலம் வந்த புகைப்படம், தாக்குதலில் உயிர் பிழைத்த தம் 11 வயது மகன் ஆதமுக்குப் பக்கத்தில் டாக்டர் நிஜ்ஜார் நிற்பதைக் காட்டியது.

டாக்டர் நிஜ்ஜாருக்கு மூளையில் கடும் பாதிப்பும் நெஞ்சு எலும்புமுறிவும் ஏற்பட்டன. ஆதமின் நிலை மிதமானது முதல் கடுமையானது என வர்ணிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்