பிலிப்பீன்ஸ் குப்பைக் கிடங்கில் மாண்டோர் எண்ணிக்கை ஆறுக்கு அதிகரிப்பு

2 mins read
d4170584-2640-44af-b857-1abd3b58a9c6
பிலிப்பீன்சின் சிபு நகரின் பினாலிய் குப்பைக் கிடங்கு மிகப் பெரிய உத்திரங்கள் விழுந்திருப்பதால் உடல்களை மீட்கும் பணிகள் சிக்கலாகியிருக்கிறது என்றனர் அதிகாரிகள். - படம்: ஏஎஃப்பி

சிபு: பிலிப்பீன்சின் சிபு நகரின் பினாலிய் குப்பைக் கிடங்கு கொட்டியதில் மாண்டோர் எண்ணிக்கை ஆறுக்கு அதிகரித்துள்ளது குப்பைக் கிடங்கில் புதையுண்டோரைத் தேடும் பணிகள் தொடரும் வேலையில் மேலும் இரண்டு சடலங்களைப் பணியாளர்கள் மீட்டனர்.

பின்னிரவு கிட்டத்தட்ட 1 மணிக்கும் 6 மணிக்கும் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக சிபு நகரமன்ற உறுப்பினர் டேவிட் டுமுலாக் தெரிவித்தார். அந்த இருவரின் உடல்களும் எங்கிருக்கிறது என்பதை ஜனவரி 10ஆம் தேதியே கண்டறிந்துவிட்டதாக அவர் கூறினார்.

மிகப் பெரிய உத்திரங்கள் விழுந்திருப்பதால் உடல்களை மீட்கும் பணிகள் சிக்கலாகியிருக்கிறது என்றனர் அதிகாரிகள்.

ஜனவரி 11ஆம் தேதி, மாலை 4 மணி நிலவரப்படி குப்பைக் கிடங்கில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தத உறுதிசெய்யப்பட்டது. காயமடைந்த 12 பேர் மீட்கப்பட்டனர், 31 பேரைக் காணவில்லை.

மீட்புப் பணியாளர்கள் கனத்த மழை ஆகிய பல இன்னல்களுக்கு இடையே பணியைத் தொடர்வதாக சிபு நகரப் பேரிடர் அபாயக் குறைவு, நிர்வாக மன்றத் தலைவருமான திரு டுமாலாக் கூறினார்.

“மீட்புப் பணியாளர்கள் ஆரோக்கிய ரீதியாக எதிர்கொள்ளும் முதல் அபாயம் குப்பையிலிருந்து எழும் துர்நாற்றம். இரண்டாவது குப்பைக் கிடங்கில் புதைந்திருக்கும் மீத்தேன் வாயு. மூன்றாவது கனமான குப்பைகளுக்கு இடையே உள்ள இரும்புச் சிதைவுகள். அவை எளிதில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்த முடியும்,” என்றார் அவர்.

மழை மற்றொரு முக்கியக் கவலை என்ற அவர், அது மிகப் பெரிய தடங்கல் என்றார்.

மீட்புப் பணியாளர்கள் மனரீதியாகவும் பாதிப்பை எதிர்கொள்வதாகக் கூறிய நிபுணர்கள், கிடங்கில் புதையுண்டோரின் அன்புக்குரியவர்களின் தவிப்பு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடும் என்றனர்.

குப்பைக் கிடங்கில் சிக்கியுள்ளோரின் மீட்புக்காகக் காத்திருக்கும் உற்றார் உறவினர்கள்.
குப்பைக் கிடங்கில் சிக்கியுள்ளோரின் மீட்புக்காகக் காத்திருக்கும் உற்றார் உறவினர்கள். - படம்: ஏஎஃப்பி

இத்தனை இக்கட்டுகளையும் மீறி மீட்புப் பணியைச் சரிவர செய்ய முடியும் என்று மீட்புப் பணியாளர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இம்மாதம் 8ஆம் தேதி கிட்டத்தட்ட 100 ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்த வளாகத்தில் குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்தது.

இம்மாதம் 8ஆம் தேதி கிட்டத்தட்ட 100 ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்த வளாகத்தில் குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்தது.
இம்மாதம் 8ஆம் தேதி கிட்டத்தட்ட 100 ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்த வளாகத்தில் குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்தது. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்